உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரில் குழந்தைகளை ஏற்றி அழகு பார்த்தார்.
தன்னைப் பார்க்க வந்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தும், தான் பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரில் அமர வைத்து வேடிக்கை பார்த்தும் மகிழ்ந்துள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. இதையொட்டி பாஜக, சமாஜ்வாடி, காங்கிரஸ் உளளிட்ட கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
பாஜக பெரும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது. சமாஜ்வாடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. எது நடந்தாலும் நடக்கட்டும் என்ற மன நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸும் உள்ளன.
இந்த நிலையில் இன்று கோரக்பூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் லக்னோ சென்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத். அப்போது அவரது ஹெலிகாப்டர் நின்றிருந்த இடத்திற்கு சிறார்கள் பலர் வந்தனர். அவர்களைப் பார்த்து குஷியான யோகி ஆதித்யநாத் அவர்களுடன் உற்சாகமாக பேசினார். பின்னர் கிட்காட் சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தார்.
அதன் பின்னர் தான் பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரில் குழந்தைகளை ஏற்றி சுற்றிக் காட்டுமாறு அதிகாரிகளிடம் கூறினார். அவரும் ஏறி அதில் அமர்ந்தார். குழந்தைகள் ஹெலிகாப்டருக்குள் ஏறி ஆர்வத்துடன் அதை சுற்றிச் சுற்றிப் பார்த்தனர். தொட்டு மகிழ்ந்தனர். அதை குழந்தை சிரிப்புடன் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார் யோகி.
இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், இந்தப் புன்னகை, இந்த நிபந்தனையற்ற அன்பு, இந்த அமைதி, இந்த இதம் இதுதான் எனது எனர்ஜி என்று கூறியுள்ளார் யோகி ஆதித்யநாத். வெற்றி பெறப் போகிறோம் என்ற களிப்புடன் இந்த குழந்தைகள் கொடுத்த மகிழ்ச்சியும் இணைந்து யோகியை டபுள் ஹேப்பி ஆக்கி விட்டது இன்று.
No comments:
Post a Comment