ராஜீவ் கொலை வழக்கு: முருகன் மனுவை வேறு அமர்வுக்கு மாற்ற உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 21, 2022

ராஜீவ் கொலை வழக்கு: முருகன் மனுவை வேறு அமர்வுக்கு மாற்ற உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் உள்ள முருகன் மனுவை வேறு அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் உள்ள முருகனை பரோலில் விடுவிக்ககோரிய மனு மீதான விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி பி.என்.பிரகாஷ், மனுவை வேறு அமர்வுக்கு மாற்றும்படி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான முருகனின் மனைவி நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்துள்ள மனுவில், தனது மகள் நளினி தற்போது பரோலில் உள்ளதால், மருமகன் முருகனுக்கும் பரோல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நளினி தனது கணவரை பரோலில் விடுவிக்க மனு அளித்தும் சிறைத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மருமகன் உடல்நலக்குறைவுடன் உள்ளதாகவும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதால் 30 நாட்கள் பரோலில் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கின் கீழமை நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றுள்ளதால், இந்த மனுவை விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், மனுவை வேறு அமர்வுக்கு மாற்றும்படி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad