மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 21, 2022

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது
தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழகத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பள்ளிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, இறைவணக்கம் கூட்டம், உடற்கல்வி பாடவேளை உள்ளிட்டவற்றுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அளித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை அடுத்து பள்ளிகளில் இறை வணக்கக் கூட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போது கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் அனுமதி வழங்கி உள்ளார். கொரோனா தொற்று குறைந்து வருவதால் உடற்கல்வி பாடவேளைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad