வீடு தேடி வரும் ரேஷன் - குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 28, 2022

வீடு தேடி வரும் ரேஷன் - குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது

மக்களின் வசதிக்கேற்ப வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.
இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான், பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக, கடந்த 16 ஆம் தேதி பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையும் பதவி ஏற்றது. முதலமைச்சராக பகவந்த் மான் பதவி ஏற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, 'யாராவது லஞ்சம் கேட்டால் அதை வீடியோ அல்லது ஆடியோவாக எனது தனிப்பட்ட வாட்ஸ் அப் மூலம் மாநில மக்கள் ஊழல் புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று, பஞ்சாப் மாநிலத்தில் மக்களின் வசதிக்கேற்ப வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் பொருட்களை வழங்குவதற்கான நேரம் கேட்டு அதற்கேற்ப வினியோகம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டத்தை, ஏற்கனவே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்த முயற்சித்தது. ஆனால் இதற்கு, டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதே திட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad