அண்ணாமலையின் கோபாலபுர குற்றச்சாட்டு: பதிலடி கொடுத்த பிஜிஆர் நிறுவனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 24, 2022

அண்ணாமலையின் கோபாலபுர குற்றச்சாட்டு: பதிலடி கொடுத்த பிஜிஆர் நிறுவனம்!

தமிழக அரசு, பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துடன் மின்சாரம் கொள்முதல் செய்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திடம், எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்கு, முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மீண்டும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இப்படி ஊழல் செய்வதுதான் திராவிட மாடல் என சாடிய அவர், இந்த விவகாரத்தில் கோபாலபுரத்துக்கு தொடர்பிருப்பதாகவும், அதாவது திமுக அரசுக்கு தொடர்பிருப்பதாகவும், இந்த முறைகேடுகளை முழுமையாக வெளிக் கொண்டுவர பாஜக போராடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து அண்ணாமலைக்கு புரிதலில்லை. இது ஒப்பந்தம் கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த 2009ஆம் ஆண்டில் போடப்பட்டது. அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் அந்த விமர்சனங்களை அவர் முன்வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அடிப்படை ஆதாரமின்றி அண்ணாமலை குற்றம் சாட்டி வருகிறார். அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி 24 மணி நேரத்தில் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு பிஜிஆர் நிறுவனத்திற்கு முறைகேடாக டென்டர் ஒதுக்கியதாக ஆளுநரிடம் அவர் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பிஜிஆர் எனர்ஜி நிறுவனம் தங்களது நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்து இந்தியப் பங்குச் சந்தைகளின் ஒழுங்காற்று மையமான செபிக்கு கடிதம் எழுதியுள்ளது. மொத்தம் 26 குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பிஜிஆர் நிறுவனம் செபிக்கு விளக்கமளித்துள்ளது.

அதில், எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்துக்கான ஏலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் கடந்த 2018ஆம் ஆண்டில் விடப்பட்டது எனவும், அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்து பிஜிஆர் நிறுவனம் குறைவான விலையில் டென்டர் கோரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 சதவீதம் பாதுகாப்பு வைப்புத்தொகை வரவு வைக்கப்பட்டு, பணியை தொடங்கவிருந்த நேரத்தில் கொரோனாவால் அது தள்ளி போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய அரசின் ஆத்மநிர்பார் திட்டத்தின்படி, மொத்த ஒப்பந்த மதிப்பில், வங்கி உத்தரவாதம் 10 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதனடிப்படையில், தங்களது நிறுவனத்துக்கும் சலுகைகள் கோரிய நிலையில், ஒப்பந்தத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்து செய்ததாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், அச்சலுகைகள் கிடைக்கப்பற்றதாகவும் அந்த சலுகைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தருவதாக உறுதியளித்த பின்னர் நீதிமன்ற வழக்கு திரும்பப்பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஜிஆர் நிறுவனம் ஒரு பேப்பர் கம்பெனி என அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், தங்களது நிறுவனத்தில் நேரடியாக 1400 வேலையாட்களும், மறைமுகமாக 2000க்கும் அதிகமானோர் பயன் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் தங்களது நிறுவனத்துக்கு 4 உற்பத்தி நிலையங்களும், சுமார் 30க்கும் அதிகமான ப்ராஜெக்டுகள் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த பணியையும் காலதாமதமாக செய்யவில்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேமிப்பு தொகை ரூ.38 கோடி மட்டுமே என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பிஜிஆர் நிறுவனம், 2020-21 நிதியாண்டில் மட்டும் ரூ.467 கோடி வருவாய் ஈட்டி இருப்பதாகவும், தற்போதைய நேர்மறை நிகர மதிப்பு ரூ.950 கோடி எனவும் தெரிவித்துள்ளது. பிஜிஆர் நிறுவனம் சார்பில் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவது மட்டுமே தங்களின் பணி எனவும், மின்சார வினியோகம் செய்வதில்லை எனவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad