கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதால், இந்தியாவில் 4 அலை வந்து அதன் விளைவாக மீண்டும் லாக்டவுன் போடப்பட்டுவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி 1,549 ஆக இருந்தது. இதனையடுத்து கொரோனா கட்டுப்ாடுகளை மாநிலங்கள் முழுமையாக தளர்த்தி கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் மாரச் 22 ஆம் தேதி 1,581 ஆக இருந்த கொரோனா மொத்த பாதிப்பு நேற்று 1,778 ஆக அதிகரித்தது. இ|ந்த எண்ணி்க்கை இன்று மேலும் அதிகரித்து 1,938 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாநிலங்களி்ல் மொத்தம் 1,938 பேருக்கு புதிதா கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் மொத்தம் 6,61,954 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும், மொத்த பரிசோதனை எண்ணிக்கை 78.49 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்துவிட்டதாக நாட்டு மக்கள் நிம்மதி அடைந்துள்ள நிலையில், புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மீண்டும் மெல்ல, மெல்ல அதிகரித்துவருவதால், கொரோனா 4 ஆவது அலை இந்தியாவில் வந்துவிடுமோ அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அத்துடன் அதன் விளைவாக நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுவிடுமோ என்ற பீதியும் மக்களிடையே எழுந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று மட்டும் செலுத்தப்பட்ட 31.81 லட்சம் டோஸ்கள் தடுப்பூசிகள் உட்பட இதுவரை மொத்தம் 182.23 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கொரோனா 4 ஆவது வந்தாலும் அதனை சமாளிக்கலாம் என்றும், மீண்டும் லாக்டவுன் போடும் அளவுக்கு நிலைமை போகாது என்றும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment