ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவர் விசாரணை ஆணையத்தில் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் பரிந்துரைத்த போதும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்திவிட்டதாக விசாரணை ஆணையத்தில் வாக்கு மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. பலமுறை இந்த ஆணையத்தை காலநீட்டிப்பு செய்தது தமிழக அரசு. இந்த விசாரணை ஆணையத்தில் பல்வேறு தரப்பினர் நேரடியாக ஆஜராகி விளக்கங்கள் கொடுத்த நிலையில் பலமுறை ஆணையத்தின் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை எதுவும் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அப்போலோ மருத்துவர்கள் 11 பேர் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகினர். அப்போலோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்வார் என கூறப்பட்டது. இந்த விசாரணையின் போது எய்ம்ஸ் பரிந்துரைத்த மருத்துவர் குழுவும் காணொளியில் வாயிலாகப் பங்கேற்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்ந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் “ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு பதவியேற்புக்கு முன்னரே உடல் நலக் குறைவு ஏற்பட்டது. தலை சுற்றல், மயக்கம், துணை இல்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்தது. சிறுதாவூர் அல்லது ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்று ஓய்வில் இருக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறி ஓய்வெடுக்க மறுத்திவிட்டார்” என அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் விசாரணை ஆணையத்தில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment