தமிழகத்தில் கொரோனா 4ஆம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், போல், ஐரோப்பிய நாடுகளான, நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும், கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா முதல் அலை தீவிரமாக பரவியது. இதன் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தொற்றின் பரவல் குறைந்ததால், படிப்படியாக பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, கொரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலைகளும் இந்தியாவில் கால் பதித்தது. இந்த அலைகளின் போதும், ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன. தொடர்ந்து, பாதுப்பு குறையத் தொடங்கியதும் தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு இந்தியா திரும்பியுள்ளது.
இந்த நிலையில், சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருகிறது. இந்தியாவிலும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோ, தமிழகத்திலும் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதற்கு இடையே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை விட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம்தான் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக, மத்திய அரசு அலோசனையும் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா 4ஆம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 25ஆவது மெகா தடுப்பூசி முகாம் குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இன்று நடைபெற்ற 25 வது மெகா தடுப்பு முகாமில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 459 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 5 கோடியே 32 லட்சம் நபர்கள் மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 4 கோடிக்கும் மேற்பட்டோர் 2 இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.” என்றார்.
தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 92 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 80 சதவீதம் இரண்டாம் தவணை செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 12- 14 வயதுடையவர்கர் 4.29 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் 51 லட்சம் நபர்கள் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். அதேபோல் 1.34 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பிற நாடுகளில் தொடர்ந்து கொரோனா 4 ஆம் அலை பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே, கொரனோ தோற்று விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் மற்ற நாடுகளைப் போல் நாமும் கொரானா தொற்றால் அவதிப்படும் சூழல் உருவாகும் என்றும் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்துவது, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment