எம்.பில்., பிஎச்.டி மாணவர்களுக்கு யுஜிசி செம ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 13, 2022

எம்.பில்., பிஎச்.டி மாணவர்களுக்கு யுஜிசி செம ஹேப்பி நியூஸ்!

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
எம்.பில்., பி.எச்.டி., முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுக்கான கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
தற்போது எம்.பில்., மற்றும் பி.எச்.டி., படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் www.ugc.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக மார்ச் 31ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
கல்வி உதவி தொகைப் பெறுவதற்கு தேர்வாகும் தகுதியுடைய மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 31,000 ரூபாயும், இதர செலவுகளுக்கு வருடந்தோறும் ரூ.12,000 வழங்கப்படும்.

இதேபோன்று, மூன்றாம் ஆண்டு முதல் மாதத்திற்கு 35,000 ரூபாய் அளிக்கப்படும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad