நீட் விலக்கு மசோதா... ஆளுநருக்கு அமைச்சர் மா.சு. ஸ்ட்ராங்க் மெசேஜ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 13, 2022

நீட் விலக்கு மசோதா... ஆளுநருக்கு அமைச்சர் மா.சு. ஸ்ட்ராங்க் மெசேஜ்!

நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா வலுவாக உள்ளது என்று கூறிய அமைச்சர், அத்தகைய மசோதாவை யாரும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது என்று ஆளுநர் ஆர்.என்,ரவிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறைமுகமாக அழுத்தம் கொடுத்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீசியன்கள் நடத்தும் தரக்கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருந்தகங்களில் ரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 60 நாட்கள் கால அவகாசத்தில் குழு அமைக்கப்பட்டு, லேப் டெக்னீசியன்களின் எந்தெந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட முடியும் என்பது தொடர்பாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடனோடு, 25,436 தொற்றுகளோடு ஆட்சியை விட்டு சென்றனர். தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா மரணங்கள் பூஜ்யம் என்கிற நிலையில் இறப்பு எண்ணிக்கை உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

எந்த நோய் வந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது என்றாலும், முன்னெச்சரிக்கை வழிகளை பின்பற்ற வேண்டும். இன்னும் 2 மாதங்களுக்காவது முககவசம் அணிய வேண்டும். தமிழகத்தில் மட்டும் பாதிப்பு குறைவாக இருக்கும் நிலையில், அண்டை மாநிலங்களில் தொற்றின் நிலை நீடித்து வருகிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தால் மட்டுமே ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகும். சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா வலுவாக உள்ளதால் தான் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அத்தகைய மசோதாவை யாரும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. தேசிய நலவாழ்வு குழுமத்தில் உள்ள 663 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சியில் இருந்தபோது அண்ணாநகரில் அண்ணா அரங்கம் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்து, அதில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி 90% அளவிற்கு பணியை முடிந்திருந்த நிலையில், அதன் பின் ஆட்சிக்கு வந்த அதிமுக பெயரை மட்டும் வைத்துக் கொண்டனர்.

தன் பிள்ளைக்கு பெயர் வைத்தால் பரவாயில்லை. பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளைக்கு பெயர் வைப்பது போன்று, திமுக ஆட்சியில் கட்டிய கட்டிடங்களுக்கு அதிமுக பெயரை வைத்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad