ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆர்வமாக விண்ணப்பித்துள்ளது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை நம்பி, ரஷியாவுக்கு எதிரான போரில் இறங்கிய உக்ரைன், தனியொருவனாய் களத்தில் போராடும்படி ஆகிவிட்டது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை சர்வதேச நாடுகள் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி என்னதான் கதறினாலும், எந்த நாடும் உக்ரைனுக்கு ஆதரவாக நேரடியாக போரில் இறங்க தயாராக இல்லை.
இதனால், ரஷியாவை சமாளிக்க என்ன செய்வதென்று எண்ணிக் கொண்டிருந்த உக்ரைன் அதிபருக்கு செம யோசனை ஒன்று உதித்ததது. அதன்படி, ரஷியாவுக்கு எதிராக போரிட சர்வதேச போர் படையை உருவாக்க உத்தரவிட்டார். இதற்காக உக்ரைன் அரசு சார்பில் பிரத்யேக இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் வாயிலாக, அமெரிக்கா, பிரிட்டன், சுவீடன், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்களும், முன்னாள் படை வீரர்களும் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.
இதி்ல் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து ரஷியாவுக்கு எதிராக போரிட, 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பதுதான். தூதரத ரீதியில் வெளியாகியுள்ள இந்த தகவல் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் -ரஷியா இடையேயான போரில் இந்தியா நடுநிலைமை வகித்துவரும் நிலையில், உக்ரைன் ராணுவத்தில் சேர நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர் என்பதும், கோவையை சேர்ந்த மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment