விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் கலசலிங்கம் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தென்காசி மாவட்டம் ஆயக்குடி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மணிகண்டன் (22) என்ற மாணவன் பி.பார்ம் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி தான் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் கல்லூரிக்கு திரும்பவில்லை என கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே விடுதியில் பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டு இருந்த ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பூட்டிய அறையை திறந்து பார்க்கும்போது மணிகண்டன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவரின் இறப்பு கொலையா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மர்மமான இறப்பு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் மாணவர் இறந்து கிடந்தது சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment