ஏர் இந்தியா நிறுவன விற்பனை தப்பே இல்லை... ஐகோர்ட் அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 11, 2022

ஏர் இந்தியா நிறுவன விற்பனை தப்பே இல்லை... ஐகோர்ட் அதிரடி!

ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடாவின் டாலேஸ் நிறுவனத்துக்கு 18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி, ஏர் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கமான 'ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம்' சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், 'தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும், விற்பனை செய்தாலும், ஓய்வு பெறும் வயதுவரை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஏர் இந்தியா குடியிருப்புகளில் இருந்து வெளியேற்ற கூடாது, மருத்துவ சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்'எனக் கோரப்பட்டுள்ளது.

'ஏர் இந்தியாவை வாங்கும் டாடா நிறுவனம், தற்போதைய ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து உத்தரவிட்ட நீதிபதி பார்த்திபன், ஏர் இந்தியா நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த முதலீட்டை பாதுகாக்கவே அது டாடா நிறுவனத்துக்கு விற்கப்படுவதாகக் கூறிய, அரசு வாதங்களை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

பங்கு விற்பனை போன்ற பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளில் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்துக்கு விற்கும் முடிவில் தவறில்லை என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad