ஆசிரியர்களுக்கு செம ஷாக் - கல்வித்துறை இப்படியொரு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 26, 2022

ஆசிரியர்களுக்கு செம ஷாக் - கல்வித்துறை இப்படியொரு அறிவிப்பு!

பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதே என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களின் கற்றல் இடைநிற்றலை தடுக்கும் விதமாக தமிழக அரசின் கட்டாய கல்வித் திட்டத்தி கீழ் அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு பகுதி நேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டனர். அந்த ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அவர்களின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி கொடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அந்த பணி முற்றிலும் தற்காலிகமானது என்பதை பணி நியமண ஆணையிலேயே தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களது பணி தேவையில்லை என்று அரசு கருதினால், முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் என்பது அரசு பணியிடங்கள் இல்லை. அந்த அடிப்படையில் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடுமுறை காலத்திற்கான அதாவது மே மாதத்திற்கான சம்பளம் வழங்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என அரசுத் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad