கொள்ளையடித்து மனைவிக்கு வளைகாப்பு: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சென்னை போலீஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 26, 2022

கொள்ளையடித்து மனைவிக்கு வளைகாப்பு: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சென்னை போலீஸ்!

சென்னையில் ஜன்னல் கதவு திறந்த வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

சென்னை, வேளச்சேரி, வீனஸ்காலனி, 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (70). இவர் இந்த பகுதியில் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இவரின் வீட்டு மாடியில் உள்ள ஜன்னல் வழியாக கதவை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர், பீரோவில் இருந்த, 86 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றார்.
இதுகுறித்து ஸ்ரீனிவாசன் அளித்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் வழக்கு பதிந்து செய்து விசாரணை நடந்தி வந்தனர். மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் வாயிலாக நடத்திய ஆய்வில் கொள்ளையடித்த நபர் பழைய குற்றவாளியான கோவை, வடமதுரையை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(32), என்பது தெரியவந்தது.
15 நாட்களுக்கு மேல் அவரை தேடி, கோவை சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். விசாரணையில் பழைய குற்றவாளியான அவர் மீது, பல மாவட்டங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

சம்பவத்தன்று கொளத்தூர் காவல் நிலைய வழக்கு தொடர்பாக, எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும். கொள்ளையடித்த நகையை அடகு வைத்து மனைவிக்கு வளைகாப்பு நடத்தியதும் தெரியவந்தது. மேலும், முத்துக்கிருஷ்ணன் வாய்தாவுக்கு வந்த போது போகிற போக்கில் கொள்ளை அடித்ததாகவும், ஜன்னல் மற்றும் கதவு திறந்த வீட்டில் மட்டுமே திருடுவேன் என்றும் வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவரிடம் இருந்து, 52 சவரன் தங்க நகைகள், 4.5 லட்சம் ரூபாய் பணம், ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஏப்ரல் 8 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad