"Iron Dome".. அதிரடியான "கேம் சேஞ்சர்".. உக்ரைனுக்கு அனுப்புமா இஸ்ரேல்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 26, 2022

"Iron Dome".. அதிரடியான "கேம் சேஞ்சர்".. உக்ரைனுக்கு அனுப்புமா இஸ்ரேல்?

ரஷ்யத் தாக்குதலை சமாளிக்க உக்ரைன் நாட்டுக்கு தனது அயர்ன் டோம் ஏவுகணைகளை இஸ்ரேல் வழங்குமா என்று எதிர்பார்ப்பு.

ரஷ்யாவிடமிருந்து எங்களைக் காக்க ஆயுதங்களை அளவே இல்லாமல் வழங்குங்க என்று நேட்டோவிடமும், அமெரிக்காவிடம் காட்டுக் கத்தலாக கத்திக் கொண்டிருக்கிறது உக்ரைன். ஆனால் ஆயுதங்களைத் தர முடியாமல் மவுனம் காத்து வருகின்றன இந்த நாடுகள். இந்த நிலையில் யூத வம்சாவளியைச் சேர்ந்தவரான உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு இஸ்ரேல் உதவிக் கரம் நீட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உக்ரைன போட்டு வெளுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. வரலாறு காணாத அடியை வாங்கிக் கொண்டு கதறி வருகிறது உக்ரைன். அமெரிக்கா, நேட்டோ அமைப்புகளிடம் தொடர்ந்து உதவி கோரி வந்த போதிலும் எந்த நாடும் உதவி செய்யாமல் மவுனம் காக்கின்றன. பகிரங்கமாக உதவினால் ரஷ்யாவின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும் என்பதால், இந்த நாடுகள் அமைதி காக்கின்றன.
இந்த நிலையில் உக்ரைனுக்கு இஸ்ரேல் உதவிக் கரம் நீட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி யூதர் ஆவார். மேலும் ரஷ்யா, எப்படி அமெரிக்காவுக்கு எதிரியோ அதேபோலத்தான் இஸ்ரேலும், ரஷ்யாவுக்கு எதிரான நாடு. இந்த அடிப்படையிலும் உக்ரைனுக்கு இஸ்ரேல் உதவ வேண்டும் என்று உக்ரைன் ஆதரவாளர்கள் குரல் எழுப்புகின்றனர்.

ரஷ்யாவைப் பார்த்து அமெரிக்கா வேண்டுமானால் பயப்படலாம். ஆனால் இஸ்ரேல் யாரைக் கண்டும் பயப்படும் நாடு கிடையாது. எனவே உக்ரைனுக்கு கை கொடுத்து இஸ்ரேல் உதவி செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவைப் போலவே, இஸ்ரேலும் அதி நவீன ஆயுதங்களை வைத்துள்ளது.

அதில் முக்கியமானதாக கருதப்படுவது "Iron Dome" எனப்படும் ஏவுகணைகள் ஆகும். தேவைதான் ஒரு மனிதனை கண்டுபிடிப்பாளானாக மாற்றும் என்று சொல்வார்கள். அதேபோலத்தான் இந்த ஏவுகணையை இஸ்ரேல் உருவாக்கவும் ஒரு அவசியத் தேவை ஏற்பட்டதே காரணம். ஹமாஸ் இயக்கத்துப் போராளிகள், காஸா முனையிலிருந்து அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த தாக்குதலிலிருந்து தனது மக்களைக் காக்க இஸ்ரேல் யோசனையில் குதித்தது. காஸா முனையிலிருந்து வரும் ஏவுகணைகளைத் தடுத்து மக்களைக் காக்க அது உருவாக்கியதுதான் இந்த "Iron Dome" ஏவுகணை அமைப்பாகும்.
இந்த "Iron Dome" ஏவுகணைத் திட்டத்தை இஸ்ரேல் செயல்படுத்த அமெரிக்கா பண உதவி கொடுத்தது. அமெரிக்காவின் பண உதவியுடன் இஸ்ரேலிய நிபுணர்கள் இந்த ஏவுகணையை உருவாக்கினர். மொபைல் லாஞ்சர் மற்றும் ரேடாருடன் கூடியது இந்த "Iron Dome" ஏவுகணை அமைப்பு. ஒவ்வொரு வாகனத்திலும் நான்கு லாஞ்சர்கள் இருக்கும். அதில் 20 தமீர் ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த ஏவுகணை அமைப்பு எந்த இடத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறதோ அந்த இடத்திலிருந்து 60 சதுர மைல் பரப்பளவுக்கு எதிரிகளால் ஊடுறுவ முடியாது. மேலும் இதன் தாக்குதல் திறன் 90 சதவீத அளவுக்கு துல்லியமாக இருக்கும். ஒரு தமீர் ஏவுகணையின் விலை 20, 000 டாலராகும். இது விலை மிகுந்த ஏவுகணை அமைப்பாக கருதப்பட்டாலும் கூட தாக்குதல் திறன் மிகத் துல்லியமாக இருப்பதால் இந்த ஏவுகணைக்கு கிராக்கி உள்ளது. அமெரிக்காவுக்கே இஸ்ரேல்தான் இந்த ஏவுகணையை சப்ளை செய்கிறது.

தற்போது காஸா முனை மற்றும் சிரிய எல்லையில் இந்த ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது.
இந்த வகை ஏவுகணையை உக்ரைனுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற கோரிக்கை இஸ்ரேலுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இஸ்ரேல் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. ஆனால் இந்த ஏவுகணையை சமாளிக்கும் வகையிலான பல்வேறு அதி நவீன ஆயுதங்களை ரஷ்யா வைத்துள்ளது என்பது வேறு விஷயம்.

No comments:

Post a Comment

Post Top Ad