11 ஆம் வகுப்பு மாணவிக்கு 5 வருடம் பாலியல் தொல்லை: தந்தை கைது... தாய் உடந்தை? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 26, 2022

11 ஆம் வகுப்பு மாணவிக்கு 5 வருடம் பாலியல் தொல்லை: தந்தை கைது... தாய் உடந்தை?

தாய்க்கு தெரிந்தும் மகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரத்தை போல இன்றைய பாலியல் பலாத்காரம் என்று சொல்லும் அளவுக்கு தினம்தினம் வன்கொடுமை, போக்சோ தொடர்பான செய்திகளை காண முடிகிறது. நாட்டு நடப்புகளை படிக்க செய்தி தாள்களையும், இணைய வழி செய்தி தலங்களையும் நாடும் பெற்றோர்களுக்கு இந்த செய்திகள் மிகுந்த பயத்தை கொடுக்கிறது.
இந்நிலையில், சென்னையில் கடந்த 5 ஆண்டுகளாக 11 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 45 வயதான தந்தையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கும் தெரியும் என்றும் செம்பியம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதானவர் மீது போக்சோ வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறுமியிடமும், தாயிடமும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad