அரசு பள்ளி ஆசிரியைக்கு கத்தி வெட்டு..! கடலூரில் நடந்த பயங்கரம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 26, 2022

அரசு பள்ளி ஆசிரியைக்கு கத்தி வெட்டு..! கடலூரில் நடந்த பயங்கரம்..!

விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆங்கில பெண் ஆசிரியரை மர்ம ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பள்ளி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரேகா. 42 வயதான ஆசிரியை காட்டுக்கூடலூர் எடப்பாளையம் அருகே உள்ள திருவள்ளூர் நகரில் வசித்து வருகிறார். இவரின் கணவர் சரவணன் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். ஆசிரியருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தை உள்ளனர்.
இந்த நிலையில், இன்று வழக்கம்போல் காலை பள்ளிக்கு வந்து ஆசிரியை ரேகா மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு மதியம் உணவுக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். உணவை முடித்து விட்டு வெளியே வரும்போது மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கினர். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தகவலறிந்த உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

reka teacher
இந்நிலையில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கத்தியால் ஆசிரியையை தாக்கி விட்டு ஓடிய குற்றவாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சில இடங்களில் அரசு பள்ளி மாணவர்களால் ஆசிரியர்களுக்கு மிரட்டல்கள் இருந்து வரும் மத்தியில் தாக்கு பிடித்துக்கொண்டு பணி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு பள்ளி ஆசிரியையை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியையை தாக்கிய நபர் யார்? குடும்ப பிரச்சினை காரணமா அல்லது பள்ளி மாணவர்களின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad