அம்மன் கழுத்தில் கை வைத்த மர்ம நபர்கள் - நகை ஆட்டையை போட்டு தப்பியோட்டம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 16, 2022

அம்மன் கழுத்தில் கை வைத்த மர்ம நபர்கள் - நகை ஆட்டையை போட்டு தப்பியோட்டம்

புதுச்சேரியில் கோவில் கேட்டின் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை பூஜை நடந்து முடிந்த பின் கோவில் பூசாரி மற்றும் கோயில் நிர்வாகி முருகன் ஆகியோர் கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் நேற்று மாலை வாழ்ந்து பார்த்தபோது கோவில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகி உள்ளே சென்று பார்த்தபோது வெளியே வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 6 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி முருகன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பகுதி முழுவதும் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது வில்லியனூர் காவல்துறையினர் அம்மன் சிலையில் இருந்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad