தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நகர காவல்துறை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினரை கணேஷ் வாகன சோதனை செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி தென்பாகம் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் தூத்துக்குடி வாடி தெருவில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்ததில் அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு வேனில் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வேனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் தூத்துக்குடி புறவழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த சுமார் 25 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, இது சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற லாரி டிரைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் கண்ணன் ஆகியோரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment