மனைவியை அடித்தே கொன்ற கணவன் (கயவன்) - மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 16, 2022

மனைவியை அடித்தே கொன்ற கணவன் (கயவன்) - மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே காலனி காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரன் என்பவரது மகன் காந்தி (67). இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாதம்மாள் (55). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் பெங்களூரில் வேலை செய்து வருகின்றனர்.
தற்போது காந்தி மற்றும் அவரது மனைவி மாதம்மாள் இருவரும் மட்டுமே அவரது வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது காந்தி ஆத்திரமடைந்து மாதம் மாலை தலை மீது பயங்கரமாக தாக்கியுள்ளார். அவர் தாக்கியதில் மாதம்மாள் மண்டை பிளவுபட்டு மயக்கம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இண்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாதம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மனைவியை கொலை செய்த காந்தியை காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad