பட்டப்பகலில் மூதாட்டியிடம் பணப்பையை மூன்று வாலிபர்கள் திருடிச் சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதன் அண்ட் ஜெர்ரி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா என்ற மூதாட்டி. இவருக்கு பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து. இவர் அந்த பகுதியில் பூக்கடை பஜார் வீதியில் காய்கறி வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவர் வாணியம்பாடி பஜார் வீதி பகுதியில் சாலையோரத்தில் வைத்து புளி மற்றும் காய்கறிகள் விட்டுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் மூதாட்டியிடம் பணம் இருப்பதை கண்டறிந்தனர்.
மேலும் அவர்கள் மூதாட்டியிடம் வந்து பொருட்கள் வாங்குவது போல பேசி அவரிடமிருந்த சுருக்குப் பையை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞர்களை பிடிக்க முற்பட்டனர். இருப்பினும் அவர்களால் அந்த இளைஞர்களை பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியிடம் விசாரணையை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் மூதாட்டியிடம் இருந்த சுருக்குப் பையில் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய 3 திருடர்களையும் சிசிடிவி காட்சிகள் வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் மூதாட்டியிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment