ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட உள்ளதா என்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையடுத்து, அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை விலை தாறுமாறாக அதிரித்துள்ளது.
இதன் விளைவாக அரிசி, கோதுமை, மருந்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க இயலாமல் தவித்து வருகின்றனர். பல்லாயிரக்கானோர் வாழ்வாதாரம் தேடி இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு புலம்பெயர தொடங்கி உள்ளனர்.
இவ்வாறு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இலங்கை கடும் நெருக்கடியை சந்தித்து வருவதையடுத்து, ராஜபக்சே தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துக்கு பதிலாக தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும், அதன் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட உள்ளதாகவும் அண்மை காலமாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, "தகுதியான நபரே தற்போது பிரதமர் பதவியை வகித்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
"ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை அளிக்கும் அளவுக்கு மூளை கோளாறு கொண்ட யாரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இல்லை" என்று அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன காட்டமாக கூறியுள்ளார்.
இலங்கை பொதுசன முன்னணி (Sri Lanka Podujana Peramuna, சிறீலங்கா பொதுஜன பெரமுன, SLPP), என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி. முன்பு சிறிய கட்சிகளாக இருந்த இலங்கை தேசிய முன்னணி, நமது இலங்கை சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் 2016 இல் இலங்கை பொதுசன முன்னணி என்ற பெயரில் இணைந்தன.
No comments:
Post a Comment