ஜியோவின் நிறுவனம் தான் ஒன்றிய அரசு: ராஜ்யசபாவில் திமுக எம்.பி., கலாய்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 28, 2022

ஜியோவின் நிறுவனம் தான் ஒன்றிய அரசு: ராஜ்யசபாவில் திமுக எம்.பி., கலாய்!

திமுக எம்.பி., டிகேஎஸ் இளங்கோவன் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து கிண்டலடித்துள்ளார்

மத்திய பாஜக அரசு சாமானியர்களுக்கான அரசாக இயங்கவில்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக இயங்குகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. பிரதமர் மோடி தனது நண்பர்களாக அதானி, அம்பானிக்காக ஏராளமான சலுகைகளை வாரி வழங்குவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஃபேஸ்புக்கில் தான் வாசித்த நகைச்சுவை பதிவு ஒன்றை குறிப்பிட்டு மாநிலங்களவையில் திமுக எம்.பி., டிகேஎஸ் இளங்கோவன் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து, துறைகளுக்கான மானிய ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா, நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேறியது. தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதி மசோதாவும் மக்களவையில் நிறைவேறியது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன், மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்தவித நன்மையும் இல்லை. இது ஒரு தோல்வியுற்ற பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் தினக்கூலி செய்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஃபேஸ்புக்கில் நான் ஒரு ஜோக்கை வாசித்தேன். ஒரு சிறுவன் தனது அப்பாவிடம் கேட்கிறான்.. “Dad, Is Jio a Government Company?” (அப்பா ஜியோ அரசு கம்பெனியா?) என. அதற்கு அவனது தந்தை பதில் சொல்கிறார் : “No My dear son, This Government is Jio's Company! (இல்லை மகனே, இந்த அரசுதான் ஜியோவின் நிறுவனம்)” என்று மத்திய அரசை சாடினார்.

No comments:

Post a Comment

Post Top Ad