'உடனே நடவடிக்கை எடுங்க!' - தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 28, 2022

'உடனே நடவடிக்கை எடுங்க!' - தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
வளசரவாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயின்ற இரண்டாம் வகுப்பு மாணவன் திக் ஷிக், பள்ளி வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது போன்ற சூழலில் மாணவன் திக் ஷிக் உயிரிழந்திருப்பது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. படுகாயமடைந்த மாணவனை பள்ளி நிர்வாகம் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தால், மாணவனை காப்பாற்றி இருக்கலாம்.
மாணவனின் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகத்தினர் அஜாக்கிரதையே காரணம். பள்ளிக் குழந்தைகளின் நலனை பாதுகாக்க இனியாவது தனியார் பள்ளிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தாருக்கு பள்ளி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவன் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இனி வரும் காலங்களில் இதுபோன்ற அஜாக்கிரதை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad