சென்னை அருகே கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த 19 வயதான மாணவி பவித்ரா சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டி.ஃபார்ம் படித்து வந்தார். இதனால் பல்லாவரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று பவித்ரா ஹாஸ்டல் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை சாத்திக்கொண்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர் கதவுடைத்து பார்த்தபோது பவித்ரா இறந்த நிலையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பவித்ரா தற்கொலைக்கு முன்பாக தனது பெற்றோருக்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பியிருப்பது தெரிய வந்தது. அதில், என்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறீர்கள். ஆனால், என்னால் சரியாக படிக்க முடியவில்லை. இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்'' என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் மாணவிகள் வட்டாரத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரியாக படிக்க முடியவில்லை என்பதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment