உ.பியில் அமோக வெற்றி… கோவை பாஜகவினர் செய்ததை பாருங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 10, 2022

உ.பியில் அமோக வெற்றி… கோவை பாஜகவினர் செய்ததை பாருங்க!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் தவிர்த்த 4 மாநிலங்களில் முன்னிலை வகிப்பதால் கோவை பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 7-ம் தேதி வரை நடைபெற்றது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக 266 தொகுதிகள் முன்னிலை வகிக்கிறது. எதிர்கட்சியான சமாஜ்வாதி 132 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 2024 நாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக உத்தரபிரதேச தேர்தல் பார்க்கப்பட்டதால் பாஜகவினர் கொண்டாட மிகுதியில் உள்ளனர். மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேசம் மட்டுமின்றி உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. இதனால் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செந்தில்பாலாஜிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த டாஸ்மாக் ஊழியர்கள்!

இந்த நிலையில், வடமாநிலங்களில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில், கோவை மாவட்ட பாஜக சார்பில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகம் முன் பாஜக வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பாஜக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் ஏபி முருகானந்தம் தலைமையில் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களிடம் பாஜக வெற்றியை தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடினர்.

No comments:

Post a Comment

Post Top Ad