இந்திய சர்வதேச கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்து தமிழக கடலோர காவல்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர், ரோந்து கப்பல் மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா என்ற ரோந்து கப்பல் புதன்கிழமை அதிகாலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது கன்னியாகுமரியில் இருந்து வடக்கு பகுதியில், இந்திய கடல் எல்லைக்குள் சந்தேகமான வகையில் ஒரு மீன்பிடி படகு நின்றுக்கொண்டிருந்தது. அங்கு விரைந்து சென்ற கடலோர கண்காணிப்பு படையினர் அந்த படகை மடக்கி பிடித்தனர்.
அந்த படகில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் இலங்கையில் உள்ள முன்னக்கரை பகுதியை சேர்ந்த ஜூட்சம்பத் பெர்னாண்டோ, வர்ணகுல சூரிய வொர்பெட் கின்ஸ்லி பெர்னாண்டோ, ரணில் இந்திக, யுவன் பிரான்ஸ் சுனில் பிஹாரேரு, அசங்கா ஆண்டன், ஆகிய 5 இலங்கை மீனவர்களையும் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
சசிகலாவுக்கு கட் அவுட்; ஓபிஎஸ், இபிஎஸ் கெட் அவுட்!
மேலும், அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை தூத்துக்குடி அருகே உள்ள தருவை குளம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்து அவர்களை தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு வாகனம் மூலம் போலீசார் அழைத்து சென்றனர்.
v
இந்தியா - இலங்கை எல்லைப்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து வரும் நிலையில், இந்திய எல்லையில் நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment