"ஹைபர்சானிக்"கை கையில் எடுத்த ரஷ்யா.. அதிர்ச்சியில் அமெரிக்கா.. புடின் செம கேம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 22, 2022

"ஹைபர்சானிக்"கை கையில் எடுத்த ரஷ்யா.. அதிர்ச்சியில் அமெரிக்கா.. புடின் செம கேம்!

உக்ரைனை முடக்கிப் போட ஹைபர்சானிக் ஏவுகணைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது ரஷ்யா.
உக்ரைன் போரில் புதிய அதிரடியாக ஹைபர்சானிக் ஏவுகணைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது ரஷ்யா. இதை அமெரிக்காவே எதிர்பார்க்கவில்லை. இந்த வகை ஏவுகணைகளை தடுத்து நிறுத்துவது கஷ்டம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

கீவ் நகரைக் குறி வைத்து தற்போது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கீவ் நகர் மீது அதி நவீன ஹைபர்சானிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது ரஷ்யா. இதனால் உக்ரைன் படையினர் நிலை குலைந்துள்ளனர். வேண்டும் என்றே உக்ரைனை நிர்மூலமாக்கும் நோக்கில் ரஷ்யா இத்தகைய தாக்குதலை நடத்துவதாக ஜோ பிடன் கூறியுள்ளார்.

ரஷ்ய ராணுவம், கேஎச் 47எம்2 கின்ஸால் ஹைபர்சானிக் ஏவுகணைகளை முதல் முறையாக பயன்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணையானது ஒலியை விட பல மடங்கு வேகமாக பயணிக்கக் கூடியது. இந்த வகை ஏவுகணையைப் பயன்படுத்தி கீவ் நகரில் உள்ள உக்ரஐன் ராணுவ கிட்டங்கியை தகர்த்து தரைமட்டமாக்கியுள்ளது ரஷ்யா.
இதுகுறித்து ஜோ பிடன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூறும்போது, உக்ரைன் படையினரின் தாக்குதலில் ரஷ்யா பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இதனால்தான் ஹைபர்சானிக் ஏவுகணைகளை அது பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் மட்டுமே உக்ரைனுக்கு பேரிழப்பை ஏற்படுத்த முடியும் என்பது ரஷ்யாவின் திட்டமாகும். இந்த ஏவுகணைகளை தடுத்து நிறுத்துவது சிரமம். அதனால்தான் ரஷ்யா இதை கையில் எடுத்துள்ளது என்றார் அவர்.

சாதாரண ஏவுகணைகளை விட அதி வேகமாக போவதால், இந்த வகை ஏவுகணைகள் ஏற்படுத்தும் சேதமும், பாதிப்பும் பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என்பதால் இந்த வகை ஏவுகணைகளை வைத்து ரஷ்யா, உக்ரைனுக்கு பேரிழப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. வழக்கமான ஏவுகணைகள் என்றால், அதை ஏவுகணை எதிர்ப்பு பீரங்கி மூலம் தாக்கி தகர்க்க முடியும். அதேபோல வானிலேயே அந்த ஏவுணைகளை வழி மறித்துத் தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளும் கூட உள்ளன. ஆனால் ஹைபர்சானிக் ஏவுகணைகளை அதுபோல தாக்கி அழிக்க முடியாது. காரணம், அது போகும் வேகம் அப்படி.
ரஷ்யா, உக்ரைனை வழிக்குக் கொண்டு மெல்ல மெல்ல நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதால் உலக நாடுகளிடையே அச்சம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இப்படியே போனால், உக்ரைன் இறங்கி வராவிட்டால், அதன் எதிர்த் தாக்குதல் வலுவாக இருந்தால், ரஷ்யா, அணு ஆயுதங்களையும் கையில் எடுக்கத் தயங்காது என்று அனைவருமே அச்சப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad