சென்னை மாதவரம் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த சொகுசு கார் திடீரென பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் இருந்து கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து சொகுசு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஆந்திரபிரேதச மாநிலம் தடாவுக்கு சென்றுக்கொண்டிருந்தனர்.
கார் சனிக்கிழமை மதியம் சுமார் 1 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா பகுதியில் சென்றபோது கார் திடீரென பழுதாகி நின்றுள்ளது. சாலையோரமாக காரை தள்ளி நிறுத்திய ஓட்டுநர், முன்பக்க பேனட்டை திறந்து என்னவென்று பார்த்துள்ளார்.
அப்போது, திடீரென புகை வந்துள்ளது. உடனடியாக காரில் இருந்த மாணவர்களை கீழே இறங்கும்படி கூறியுள்ளது. அவர்கள் கீழே இறங்கி சில நிமிடங்களில் கார் தீப்பற்றி எரிந்துள்ளது.
ரயிலில் பயணம் செய்தால் ரூ.1 லட்சம் பரிசு!
சம்பவம் குறித்து அறிந்த மாதவரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து ஓட்டுநர் மெய்ஞானத்திடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சாலையில் சென்றுக்கொண்டிருந்த சொகுசு கார் திடீரென பற்றி எரிந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment