வேளாண் விளைபொருட்களை முதன்முறையாக ஏற்றுமதி செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் ஆய்வக கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத்துறை நிதி அறிக்கையில், விவசாயிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைக்கிணங்க, தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது அதற்குரிய நச்சுத்தன்மை வரம்பிற்கான ஆய்வக அறிக்கை
பெறுவதற்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால், தமிழக அரசு இதற்கு நிதியுதவி வழங்கிடும் நோக்கத்தில், ஆய்வக கட்டணத்தில் 50 சதவீதம் (அல்லது) ரூ.10,000/- இதில் எது குறைவோ அதனை முதல்முறை ஏற்றுமதி செய்திடும் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கிட அறிவிப்பு செய்துள்ளது.
இத்திட்டத்தினை தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் செயல்படுத்திடும். இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்பும் முதல்முறையாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் / ஏற்றுமதியாளர்கள் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி ஆணையத்தில் (APEDA) பதிவு செய்திருத்தல் வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்துள்ள முதல்முறையாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் /ஏற்றுமதியாளர்கள் http://agrimark.tn.gov.in/MRS/exporter என்ற இணைய தளத்தில் பதிவு செய்திட வேண்டும். மேலும், கீழ்காணும் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
1. அபீடாவால் வழங்கப்பட்ட RCMC சான்றிதழ்.
2. முதல் முறையாக ஏற்றுமதி செய்ததற்கான சான்று.
3. ஆய்வக சோதனைக்கான விலைப் பட்டியல் (Invoice)
4. சுங்க மற்றும் தாவர பரிசோதனை துறையால் வழங்கப்பட்ட அனுமதி (Customs/PQ-
Clearance)
4. சரக்கு கட்டண இரசீது (Bill of Lading )
விண்ணப்பங்களை 31.03.2022-க்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment