தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆடு திருடு போய் வருவதாக மாவட்ட காவல்துறைக்கு தொடர் புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனையடுத்து ஆடுகளை திருடும் மர்ம கும்பலை பிடிப்பதற்கு மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேம்பார் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்ததில் ஆடுகளை திருடி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சாத்தையன் மகன் செல்வராஜ் (55) மற்றும் காரைக்குடி கண்டனூர் ரோடு பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ஆறுமுகம் (52) என்பதும் அவர்கள் இருவரும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆடுகளை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரையும் அவர்களிடமிருந்த 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட (50 லட்சம்) மதிப்புள்ள 3 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தனிப்படை பிரிவில் பணியாற்றி வந்த விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்காதர பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த திருட்டு கும்பலை சேர்ந்த ஒருவரிடம் குண்டாஸ் போடாமல் இருக்க மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டதாகவும் தங்கள் காரை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறி அந்த கும்பலிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரல் ஆனது.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார். பல்வேறு இடங்களில் ஆடுகளை திருடி விற்று பல லட்ச ரூபாய் சம்பாதித்து வரும் கும்பலிடம் காவல் உதவி ஆய்வாளர் பணம் கேட்டு பேரம் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment