'நல்ல காசுல சாப்பிடுங்க சார், கிட்னி போயிடும்'... மானத்தை வாங்கிய தமிழக காவலர்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 3, 2022

'நல்ல காசுல சாப்பிடுங்க சார், கிட்னி போயிடும்'... மானத்தை வாங்கிய தமிழக காவலர்கள்

ஈரோடு அருகே லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானி ஆற்று பாலத்தின் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் தினமும் கர்நாடகாவுக்கு சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடகா நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இருவர், லாரியை நிறுத்தி ஜீப்பில் இருந்து கொண்டே லாரி ஓட்டுநரை அழைத்தனர்.
பின்னர் லாரியின் ஓட்டுநரிடம் உரிமத்தை வாங்கி வைத்து கொண்டு லஞ்சம் கேட்டனர். அப்போது அந்த லாரி ஓட்டுநர் தன்னிடம் பணம் இல்லை என கூறி பர்சை திறந்து காட்டினார். அப்போது பர்சில் 50 ரூபாய் இருந்தது. அதை லாரி ஓட்டுநர் போலீசாரிடம் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் போலீசார் 50 ரூபாயை வாங்க மறுத்து சிறிய வாகனங்களே 100 ரூபாய் கொடுக்கும் போது நீ 50 ரூபாய் கொடுத்தால் எப்படி.. 200 ரூபாய் கொடுத்து விட்டு செல். இல்லை என்றால் வழக்கு போடுவோம் என்று மிரட்டினர்.
அதற்கு பதில் அளித்த லாரி ஓட்டுநர், தினமும் 50 ரூபாய் கொடுத்து விட்டு தான் செல்கிறேன். நீங்கள் அரசு சம்பளம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள். என்னிடம் 200 ரூபாய் கேட்பது நியாயமா? என்றார். தொடர்ந்து பேசிய போலீசார் சரி 200 ரூபாய் தரவில்லை என்றால் பரவாயில்லை. 100 ரூபாய் கொடு என்று கூறினர். இதையடுத்து லாரி டிரைவர் பணத்தை கொடுத்துவிட்டு, நல்ல பணத்துல சாப்பிடனும் இல்லனா லிவர் கிட்னி போயிடும் என போலீசாருக்கு சாபம் விட்டபடி சென்றார்.
லாரி டிரைவரிடம் போலீசார் லஞ்சம் கேட்டு பேரம் பேசிய இந்த காட்சிகளை அருகில் இருந்த ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாளது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில்,லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது தாளவாடி காவல்நிலைய காவலர் செல்லக்குமார் மற்றும் பங்களாபுதூர் காவலர் கந்தசாமி என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மேலும் இந்த வீடியோ தொடர்பாக அவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad