முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள்... பிரதமர் மோடி ஷாக்?! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 31, 2022

முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள்... பிரதமர் மோடி ஷாக்?!

பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின்போது தான் அழுத்தமாக முன்வைத்த கோரிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நான்கு நாட்கள் பயணமாக நேற்று டெல்லி சென்றுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றபின் கடந்த ஓராண்டில் அவர் மேற்கொள்ளும் மூன்றாவது டெல்லி பயணம் இது. இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக இன்று இவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து பேசினார்.

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுடனான தமது சந்திப்பு குறித்து டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் அழுத்தமாக பதிவு செய்துள்ளேன். மதுரவாயல் உயர்மட்ட சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க வேண்டும் எனவும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் மோடியிடம் வலியுறுத்தி உள்ளேன்.


அவசியம் வரணும்: மோடிக்கு ஸ்டாலின் அழைப்பு!

இலங்கை தமிழர்களுக்கு உணவு, மருந்து வழங்க அனுமதி அளிக்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தியுள்ளேன்
எனது கோரிக்கைகளை கேட்ட பிரதமர், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சிக்கரமாக அமைந்துள்ளது. டெல்லியில் உள்ள தமிழ் மாடல் பள்ளிகளை நாளை பார்வையிட உள்ளேன்.

தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும், தமிழகத்தில் டிஆர்டிஓ ஆய்வு கூடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தி உள்ளேன்.
டெல்லியில் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad