புதுச்சேரியில் மனைவி மீது கணவன் ஆசிட் வீசிவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்துள்ள கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அழகுமீனா. இவர்களுக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், அழகுமீனாபுதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்துள்ளார்.
வழக்கம் போல் இன்றைக்கும் அவர் வேலைக்கு வந்துள்ளார். இவருடைய கணவர் கணேசன் இன்று மதியம் பியூட்டி பார்லருக்கு வந்து மீனாவிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கணேசன் தான் மறைத்து வைத்திருந்த ஆசிடை அழகுமீனா மீது வீசி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் முகம், கைகளில் படுகாயமடைந்த அழகுமீனாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை அறிந்த ஒதியஞ்சாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் கணேசனையும் தேடி வருகின்றனர். மனைவி வேலை செய்யும் இடத்திற்கே சென்று கணவன் ஆசிட் வீசி தாக்கிய சமயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment