"ஆயுதங்கள் தேவை".. சீனாவின் கதவைத் தட்டிய ரஷ்யா.. கடுப்பில் அமெரிக்கா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 14, 2022

"ஆயுதங்கள் தேவை".. சீனாவின் கதவைத் தட்டிய ரஷ்யா.. கடுப்பில் அமெரிக்கா!

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, சீனாவின் ஆயுத உதவியை நாடியுள்ளது. ஆனால் சீனா ஆயுதங்களைக் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா, மறுபக்கம், உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமரிக்கா இப்படி எச்சரிக்கை விடுப்பதற்குப் பதில், எந்த நாடும், எந்த நாட்டுக்கும் ஆயுத உதவியை செய்யக் கூடாது என்று அமெரிக்காவும், சீனாவும் முடிவெடுக்க வேண்டும் என்று சீன அரசின் செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் ஹூ ஜிஜின் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது போர் புரிந்து வரும் ரஷ்யா, போதிய ஆயுதம் இல்லாமல் தத்தளிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு தேவையான ராணுவ உதவிகளை செய்யுமாறு அது நட்பு நாடான சீனாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

ஆனால் சீனா ஏதாவது உதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச அளவிலான பொருளாதாரத் தடைகளை சீனா எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சீனா உதவி செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

இதற்கிடையே, சீனாவிடம் என்ன மாதிரியான உதவிகளை ரஷ்யா கேட்டுள்ளது என்ற விவரத்தை யாரும் வெளியிடவில்லை. இருப்பினும் முக்கியமான ராணுவ உதவிகளை ரஷ்யா கோரியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ரஷ்யா தனது விமானப்படையை பயன்படுத்தாமல் உள்ளது. இதனால்தான் அதன் ராணுவத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. உக்ரைன் தனது விமானப்படையைப் பயன்படுத்தி ரஷ்ய ராணுவத்துக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல ஆயிரம் ரஷ்ய வீரர்கள் இந்தப் போரில் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனை விட ரஷ்ய ராணுவத்துக்குத்தான் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே ரஷ்யாவின் போரால் சீனாவுக்கு தர்மசங்கடமான நிலைதான் உள்ளது. அந்த நாட்டைப் பொறுத்தவரை அதன் வர்த்தகத்துக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தேவைப்படுகிறது. இந்த இரண்டு முக்கிய சந்தைகளையும் முழுமையாக பிடிக்க வேண்டும் என்பதே சீனாவின் இலக்காகும். அப்போதுதான் உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக அது மாற முடியும். மறுபக்கம், மிக நெருங்கிய தோழனான ரஷ்யா, உக்ரைன் போரில் ஈடுபட்டிருப்பதால் அதற்கும் உதவ வேண்டிய கட்டாயத்தில் சீனா உள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யாவை கண்டிக்க மறுத்து விட்டது சீனா. மேலும் ரஷ்யாவின் நிலைப்பாட்டையும் அது ஆதரிக்கிறது. ரஷ்யா தனது சொந்தப் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் போரில் ஈடுபட்டுள்ளதாகவும், நேட்டோ அமைப்பை விஸ்தரிக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்ததே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்றும் சீனா கூறி வருகிறது. இதனால் அமெரிக்கா கடுப்பில் உள்ளது.
அதேசமயம், உக்ரைனுக்கு ஆயுதங்களைக் கொடுத்து போரை ஊக்குவித்து வரும் அமெரிக்காவுக்கு, சீனாவைக் கண்டிக்க அருகதை கிடையாது என்று ரஷ்ய ஆதரவாளர்கள் சாடுகின்றனர். அமெரிக்கா, உக்ரைன் விவகாரத்தில் தலையிட்டதே இந்தப் போருக்கு அடிப்படைக் காரணம். அமெரிக்கா விலகினால் மட்டுமே ரஷ்யாவும் தனது போரை நிறுத்தும். நேட்டோ விரிவாக்கத்தை அமெரிக்கா கைவிட வேண்டும். அப்படிச் செய்யாத வரை போரும், மோதலும் நீடித்தபடிதான் இருக்கும் என்றும் அவர்கள் விளக்குகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad