உக்ரைன் - ரஷ்யா போர்: தடுக்க என்ன வழி - டொனால்ட் ட்ரம்ப் நூதன யோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 7, 2022

உக்ரைன் - ரஷ்யா போர்: தடுக்க என்ன வழி - டொனால்ட் ட்ரம்ப் நூதன யோசனை!

உக்ரைன் மீது ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை தடுக்க அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நூதன யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு படைகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளதால், அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. மேலும், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையான ஜாபோரிஜியா அணு மின் நிலையத்தை கைபெற்றியுள்ளது.

அதேசமயம், உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா., சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா., சபை தங்களால் இயன்ற முயற்சிகளை, செய்து பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளன. அதேசமயம், தற்காலிகமாக போர் நிறுத்ததையும் ரஷ்யா அறிவித்துள்ளது.
முன்னதாக, உக்ரைனுக்கு பக்கபலமாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் இருந்தன. ஆனால், ரஷ்யா போர் தொடுத்ததும் அந்த நாடுகள் பின்வாங்கி விட்டன. இந்த தகவலை உக்ரைன் அதிபரே உருக்கமாக தெரிவித்திருந்தார். தாங்கள் தனியாக தங்களது நாட்டை காப்பாற்ற போரிட்டு வருவதாக அவர் தெரிவித்திருந்தார். போரில் நேரடியாக உதவ முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டாலும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவுடனே உக்ரைன் போரிட்டு வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடியரசுக் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று வாஷிங்டனில் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ரஷ்யா மீது எந்தக் காரணத்தை கொண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அதிபர் ஜோ பைடன் கூறி வருகிறார். இப்படி பேசுவதை முதலில் அவர் நிறுத்த வேண்டும். மனிதநேயத்துக்கு எதிராக ரஷ்யா செயல்படுவதை அனு மதிக்கக் கூடாது. நேட்டோ என்பது வெறும் காகிதப் புலியாக செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது என்றார்.


உக்ரைன் மீதான போரை நிறுத்த ஒரே வழிதான் இருக்கிறது என்று தெரிவித்த சொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க போர் விமானங்களில் சீனக் கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். பிறகு ரஷ்யாவும், சீனாவும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும். நாம் நிம்மதியாக வேடிக்கை பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, தனது ஆட்சி காலத்தில் ரஷ்யாவுடன் இணக்கமாக இருந்ததாகவும், மற்ற அதிபர்கள் காலத்தில் பல்வேறு அத்துமீறல்கள் நடந்த நிலையில், தனது ஆட்சி காலத்தில் அமெரிக்கா அமைதியாக இருந்ததாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad