தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு: உங்கள் ஊர் நிலவரம் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 25, 2022

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு: உங்கள் ஊர் நிலவரம் என்ன?

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாள்கள் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 25.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

26.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27.03.2022: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.03.2022, 29.03.2022: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சின்கோனா (கோயம்புத்தூர்) 3, அரிமளம் (புதுக்கோட்டை), சின்னக்கல்லாறு (கோவை), சிவகாசி (விருதுநகர்), வால்பாறை (கோவை) தலா 2, ஆழியாறு (கோவை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), பெரியார் (தேனி), அமராவதி அணை (திருப்பூர்), கொடவாசல் (திருவாரூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad