வேன் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில், பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
மர்தானில் இருந்து காலாகோட் நோக்கி சென்றபோது எதி்ர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயங்களுடன் மீ்ட்கப்பட்ட 16 பேர் கோகிஸ்தான் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறி்தது வருத்தம் தெரிவித்துள்ள கைபர் -பக்துன்க்வா மாகாண முதல்வர் மெஹ்மூத் கான், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவ உதவியை வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment