பங்கு சந்தையின் இந்த வாரத்திற்கான 4வது நாள் வர்த்தகத்தில், ஏற்றம் காணப்படுகின்றது. நிஃப்டி, சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றத்திலேயே உள்ளன.
அமெரிக்க மத்திய வங்கி இன்று வட்டியை அதிகரித்துள்ளது. ஆனாலும், ரஷ்யா உக்ரைன் பிரச்சனைகள் முதலீட்டாளர்களால் கண்காணிப்பட்டு வருகிறது.
உலக சந்தைகள்
அமெரிக்க பங்கு சந்தைகள் நேற்று நல்ல நிலையிலேயே ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. இதனால், ஆசிய சந்தைகள் அனைத்தும் இன்று ஏற்றத்திலேயே தொடங்கியுள்ளன. எனவே, இந்திய சந்தையும் ஏற்ற்றத்தில் உள்ளன.
வெளியேற்றப்பட்ட முதலீடுகள்
நிஃப்டி தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி 11ல் இருந்து தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், நேற்றைய அமர்விலும் முதலீடுகள் சற்று அதிகரித்துள்ளது
மார்ச் 16 நிலவரப் படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 311.99 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதேபோல், உள்நாட்டு முதலீட்டாளர்கள், 772.55 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
இன்று பங்குச் சந்தை தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 498.34 புள்ளிகள் அதிகரித்து, 57,314.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 153 புள்ளிகள் அதிகரித்து, 17,128.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 819.79 புள்ளிகள் அதிகரித்து, 57,636.44 புள்ளிகளாகவும், நிஃப்டி 227.90 புள்ளிகள் அதிகரித்து, 17,203.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1676 பங்குகள் ஏற்றத்திலும், 331 பங்குகள் சரிவிலும், 66 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
பங்குச் சந்தை குறியீடுகள்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. அதுவும் பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குறியீடு 2% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதே நிஃப்டி 50,பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ கன்சியூமர்ஸ் டியூரபிள், ஹெல்த்கேர், பிஎஸ்இ கன்சியூமர்ஸ் டியூரபிள், மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி, சென்செக்ஸ் குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, டாடா கன்சியூமர் டியூரபிள், கோடக் மகேந்திரா, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லாபத்திலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் நஷ்டமடைந்தவர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லாபத்தில் உள்ளன.
இந்த நேர நிகழ்வு
12.15 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 1033 புள்ளிகள் அதிகரித்து, 57,849 புள்ளிகளாகவும், நிஃப்டி 309 புள்ளிகள் அதிகரித்து, 17,285 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
No comments:
Post a Comment