மாணவரின் கல்விக்கு சாதி, பணம், மதம், பாலினம் தடையாக இருக்கக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி வியாழன், 10 மார்ச், 2022 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, April 12, 2022

மாணவரின் கல்விக்கு சாதி, பணம், மதம், பாலினம் தடையாக இருக்கக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி வியாழன், 10 மார்ச், 2022

மாணவரின் கல்விக்கு சாதி, பணம், மதம், பாலினம் தடையாக இருக்கக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி வியாழன், 10 மார்ச், 2022

சாதி, ஊர், பின்புலம், பணம், மதம், உடை, பாலினம் எதுவும் ஒரு மாணவரின்  கல்விக்கு தடையாக அமைந்திடக் கூடாது. அத்தகைய சமூகத்தை படைக்கத்தான் போராடி  வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது:
 
அனைவருக்கும் கல்வி என்ற முன்னெடுப்பை முதன்முதலில் பெரிய அளவில் செயல்படுத்தியது நமது தமிழ்நாடுதான். அத்தகைய சமூகநீதி விளைந்த மண் இது. நீதிக்கட்சி தலைவர்கள், காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் என தொடர்ந்து வந்த முதலமைச்சர்கள் அனைவருமே மாணவர்களை கல்வி சாலைகளுக்கு அழைத்து வந்தார்கள். கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கினார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர், உயர்கல்வியில் முன்னேறிய மாநிலம் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.  சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்தார். இவை அனைத்துக்கும் மேலாக, நுழைவுத்தேர்வு முறையை நீக்கினார். இன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பொறியாளர்களும் தலைசிறந்த மருத்துவர்களும் உருவாகியுள்ளனர் என்றால் அதற்கு வித்திட்டது திராவிட பேரியக்கமும்,  கலைஞரும்தான். இன்று நீட் என்ற பெயரில் தகுதி என்ற தடைக்கலை போடுகிறார்கள். அதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அந்த தடைக்கல்லும் தூக்கியெறியப்படும்.
தமிழ்நாட்டு கல்வி முறையை குலைக்க நீட் தேர்வை போலவே, பழைய கருத்தாக்கங்களுக்கு, ‘புதிய கல்வி கொள்கை’ என்று ஒப்பனை போட்டு மீண்டும் கொண்டு வருகிறார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் ஒன்றிய பாஜ அரசின்கீழ் கல்வி மிக மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது இந்த நாட்டின் சொத்து. ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை. அதை ஒன்றியத்தில் உள்ள ஓர் ஆட்சியின் கட்சி, ஆக்கிரமித்து சீரழிக்க நினைப்பது, இந்த நாட்டின் உயிர்க்காற்றை பறிப்பதற்கு சமம். இதை நல்லோர் யாரும் அனுமதிக்க மாட்டார்கள். அதனால்தான் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கே கொண்டுவர வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறோம்.


கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்திட ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம். இத்திட்டத்தை உலக புகழ்பெற்ற பொருளாதார வல்லுனரான ழான் திரேஸ், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் செயல்படுத்த அம்மாநில அரசுக்கு பரிந்துரை செய்கிறார். தமிழ்நாட்டில் உள்ள 24 ஆயிரத்து 345 அரசு தொடக்க பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. 6 ஆயிரத்து 992 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், நவீன அறிவியல் மற்றும் மொழி ஆய்வகங்கள் உருவாக்கப்படுகின்றன.

 
நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சிகளும், மாணவர்களுக்கான மென்திறன் பயிற்சிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, ‘மாநில கல்வி கொள்கை’ உருவாக்கப்படவுள்ளது. கல்வி அறிவில் சிறந்த மாணவர்கள் என்பதோடு, அவர்களுடைய திறன் மேம்பாடு அடைய, கடந்த மார்ச்-1 அன்று, மிகப் புதுமையான ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.

சாதி, ஊர், பின்புலம், பணம், மதம், உடை, பாலினம் எதுவும் ஒரு மாணவரின் கல்விக்கு தடையாக அமைந்திடக் கூடாது. அத்தகைய சமூகத்தை படைக்கத்தான் போராடி வருகிறோம். கல்வி அறிவிலும், திறன் மேம்பாட்டிலும் சிறந்தவர்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் என்று உலகம் இன்னும் இறுக்கமாக அரவணைத்துக்கொள்ளும் நாளை நோக்கி நாம் வேகமாக நடைபோட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad