மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை தொடரலாம்: பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, April 13, 2022

மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை தொடரலாம்: பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு

மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை தொடரலாம்: பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு
மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை தொடரலாம் என யுஜிசி அனுமதி அளித்துள்ளது. மாணவர்கள் ஒரே பல்கலைக்கழகத்தில் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பட்டப்படிப்புகளை தொடர முடியும் என யுஜிசி தலைவர் எம் ஜக்தேஷ் குமார் அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

 
புதிய தேசிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, மாணவர்கள் பல திறன்களைப் பெற அனுமதிக்கும் வகையில், UGC புதிய வழிகாட்டுதல்களைக் கொண்டு வருகிறது. அதன்படி, ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இயற்பியல் முறையில் தொலைதூர கல்விமுறை மூலமாகவோ, ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதிநேரமுறை (part time) மூலமாகவோ இரண்டு பட்டப்படிப்புகளை தொடர அனுமதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு முன்னதாக ஒரு மாணவரால் ஒரு நேரத்தில் ஒரு முழு நேரப் படிப்பை மட்டுமே படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad