தனியார் கல்லூரிகள் ஆக்கிரமித்த நிலங்கள் மீட்கப்படுமா?..
தனியார் கல்லூரிகள் ஆக்கிரமித்த நிலங்கள் மீட்கப்படுமா?.. சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா(திமுக) பேசுகையில்“தாம்பரம் நகராட்சியின் கடப்பேரி பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும்.
அரசுக்கு சொந்தமான நிலங்களை சில தனியார் கல்லூரிகள் ஆக்கிரமித்துள்ளன அவற்றை, அரசு நடவடிக்கை மேற்கொண்டு நிலங்களை கையகப்படுத்துமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் பதில் அளித்து பேசுகையில் “முழுமையான கருத்துரு பெறப்பட்ட உடன் அரசளவில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு நிலங்களை கல்லூரிகள் ஆக்கிமித்தது தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் அந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்டு அங்கு அரசு சார்பில் கட்டிடங்கள் கட்டப்படும்.இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment