கல்வி ஊக்கத்தொகை - பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு: தமிழக அரசு உத்தரவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, April 13, 2022

கல்வி ஊக்கத்தொகை - பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு: தமிழக அரசு உத்தரவு

கல்வி ஊக்கத்தொகை பெறும் கிராமப்புற மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு: தமிழக அரசு உத்தரவு
சென்னை: கல்வி ஊக்கத்தொகை பெறும் கிராமப்புற மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3 முதல் 6ஆம் வகுப்பு வரை படிக்கும் கிராமப்புற மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வசதியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவியர் அதிக எண்ணிக்கையில் பயனடையும் வகையில், கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரது ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.72,000 லிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதாவது, 3 முதல் 6 ம் வகுப்பு வரை படிக்கும் கிராமப்புற மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வசதியாக பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad