ரூ.5 ஆயிரம் முதல் பரிசு - பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஏப். 19 இல் பேச்சுப் போட்டி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, April 10, 2022

ரூ.5 ஆயிரம் முதல் பரிசு - பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஏப். 19 இல் பேச்சுப் போட்டி

ரூ.5 ஆயிரம் முதல் பரிசு - பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஏப். 19 இல் பேச்சுப் போட்டி
அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி வரும் ஏப். 19 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ராமநாதபுரம் நகரில் உள்ள சுவாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் என தனித்தனியாக வழங்கப்படும்.

 
போட்டிகளில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்களில் இருவா் தோ்வு செய்யப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. பள்ளி அளவில் 30 மாணவா்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளனா்.

ஆகவே, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலரைத் தொடா்புகொண்டு பேச்சுப் போட்டியில் சம்பந்தப்பட்ட மாணவா்கள் பங்கேற்கலாம். ஒரு கல்லூரியில் இருந்து 2 போ் மட்டுமே பங்கேற்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad