'இந்தியா அதை செய்தால் ஓகே தான்!' - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பளீச்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 1, 2022

'இந்தியா அதை செய்தால் ஓகே தான்!' - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பளீச்!

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா மத்தியஸ்தம் செய்தால் வரவேற்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா மத்தியஸ்தம் செய்தால் அதை வரவேற்போம் என, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்து உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல், உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், கீவ், கார்கிவ், கெர்சான், மயுரிபோல் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ரஷ்யப் படைகள் தாக்குதலுக்கு பயந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைன் நாட்டில் இருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உக்ரைன் - ரஷ்யா இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டது. இதை அடுத்து படைகளை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்தது.

இந்நிலையில், அரசு முறை பயணமாக, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை சிறப்பு விமானத்தில் தலைநகர் டெல்லிக்கு வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, டெல்லியில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று சந்தித்து பேசினார். உக்ரைன் போருக்கு மத்தியில் இந்தியா குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்குவது குறித்து பரிசீலனை செய்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று இந்தியா நினைக்கிறதோ அவற்றை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் இந்தியா மத்தியஸ்தயராக இருக்க விரும்பினால் அதை செய்யட்டும். இந்தியா ஒரு முக்கியமான நாடு. தீர்வு காண்பதில் இந்தியா பங்கெடுத்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம்.

பல தசாப்தங்களாக இந்தியாவுடனான உறவு வளர்ந்து வருகின்றன. உறவுகள் என்பது மூலோபாய கூட்டாண்மைகள். இதன் அடிப்படையில்தான் நாங்கள் அனைத்து துறைகளிலும் எங்கள் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறோம். உக்ரைன் நெருக்கடியை இந்தியா முழுவதுமாக உற்று நோக்குகிறது. போருக்கு பின் உக்ரைன் அமைதியான நாடாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் சுதந்திரம் மற்றும் உண்மையான தேச நலன்களில் கவனம் செலுத்துதலை கொண்டுள்ளது. இந்தியா மீது அமெரிக்காவின் அழுத்தத்தால் இந்திய - ரஷ்ய உறவுகள் பாதிக்கப்படாது. அவர்கள் (அமெரிக்கா) மற்ற நாடுகளை தங்கள் அரசியலை பின்பற்றும்படி வற்புறுத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad