புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1(இன்று) முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 2022-2023-ஆம் ஆண்டுக்கான ஆலோசனை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் ஆன்லைன் வாயிலாக கருத்து கேட்கப்பட்டது.
பின்னர், மின் கட்டணத்தை உயர்த்தி உத்தேசப் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது. 100 யூனிட்டுக்குள் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 பைசா உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101-ல் இருந்து 200 யூனிட் வரை ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 15 பைசா உயர்ந்து ரூ.2.75 ஆகவும், 201 யூனிட்டுக்கு மேல் வீட்டு உபயோக கட்டணங்களிலும், வர்த்தகம், விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டண உயர்வானது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டிருந்து.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதால் மின் கட்டண உயர்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் என எதிர் கட்சிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தன. அந்த கோரிக்கைகளை அரசு நிராகரித்துவிட்டது.
நாவடக்கம் தேவை; நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக புதுச்சேரி அதிமுகவினர் போர்க் கொடி!
இந்தநிலையில், புதுவையில் ஏப்ரல் 1 (இன்று) முதல், வீட்டு உபயோக மின் கட்டணம் 100 யூனிட்டுக்குள் 35 காசுகள் உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101 யூனிட்டில் இருந்து 200 யூனிட் வரை 15 காசுகள் உயர்ந்து ரூ.2.75 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பையும் மீறி அமல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment