விருதுநகரில் கைது செய்யப்பட்டுள்ள கூட்டு பலாத்கார கைதிகளின் திடீர் உடல் நிலை கண்டிஷன் சிபிசிஐடி போலீசாரை பதறி துடிக்க செய்துள்ளது.
விருதுநகர், மேலத்தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (27). இவரும், தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாண்டியன் நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணுடன் ஹரிஹரன் உடலுறவில் ஈடுபட்டு உள்ளார். மேலும், அதை செல்போனில் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதை தொடர்ந்து, ஹரிஹரன் நண்பர்களான ரைஸ் மில் உரிமையாளர் மகன் ஜூனத் அகமது (27), டிரைவர் பிரவீன் (21) மற்றும் 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் ஹரிஹரன் காதலித்த இளம்பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து இளம்பெண் தனக்கு தெரிந்த மாடசாமி (37) என்பவரிடம் கூறியபோது அந்த வீடியோவை தனது செல்போனுக்கும் பார்வர்டு செய்து கொண்டு அவரும் மிரட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
இதை தொடர்ந்து இளம்பெண் இச்சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்தனர்.
அதன்படி சமூக நலத்துறை அலுவலகத்தில் இளம்பெண்ணிடம் எஸ்.பி முத்தரசி, டிஎஸ்பி வினோதினி நேரில் விசாரணை நடத்தினர். அப்போது இந்த வன்கொடுமை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் கேடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரில் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவரான ஜுனைத் அகமது இன்று சிபிசிஐடி விசாரணையின்போது திடீரென மயங்கி விழுந்தார். சற்று நேரத்தில் மேலும் ஒரு கைதி மாடசாமி என்பவரும் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளவர்களை காலை, மதியம், இரவு என தினந்தோறும் 3 முறை மருத்துவர்கள் நேரிடையாக வந்து, மருத்துவ பரிசோதனை செய்து வந்த நிலையில் ஜூனைத் அகமது, மாடசாமி ஆகியோர் திடீரென மயக்கம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment