தெலுங்கு வருட பிறப்பு... சனிக்கிழமை... சிறப்பாக தயாராகிவரும் திருமலை திருப்பதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 1, 2022

தெலுங்கு வருட பிறப்பு... சனிக்கிழமை... சிறப்பாக தயாராகிவரும் திருமலை திருப்பதி!

தெலுங்கு வருட பிறப்பை வரவேற்க, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பாக தயாராகி வருகிறது.
தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி கடந்த மாதம் 29 ஆம் தேதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக கோயில் முழுவதும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு, பிரகாரம் முழுவதும் பல வண்ண மலர்கள் மற்றும் பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று கோவில் கோபுரம் இரவு நேரங்களில் ஜொலிக்கும் விதத்தில் மின்விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் ஜொலிக்கிறது.

தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி ,நாளை அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து ஏழுமலையானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் செய்யப்பட உள்ளன.
புதுவரு பிறப்பையொட்டி நாளை முக்கிய நிகழ்வாக, ஏழுமலையான் முன்பு புதிய பஞ்சாங்கம் படிக்கப்பட உள்ளது. நாளை வார இறுதி நாள் என்பதால் இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது..

தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் சனிக்கிழமை என்பதால் நாளை ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் என்பதால், திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad