கோவையில் சீனியரை நிர்வாணமாக்கி அடித்த ஜூனியர் மாணவர்கள்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 1, 2022

கோவையில் சீனியரை நிர்வாணமாக்கி அடித்த ஜூனியர் மாணவர்கள்..!

கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ துறை சார்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் சீனியர் ஜூனியர் மோதலில் சீனியர் மாணவரை 10க்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து தாக்கி அரை நிர்வாணப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட மாணவர் இந்த கல்லூரியில், பிபிஏ துறையில் படித்து வரும் கேரளா மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

அந்த மாணவரை சக கல்லூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் தாக்கி அரை நிர்வாணமாக அடித்து இழுத்து சென்றுள்ளனர். பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த மோதலின்போது, சீனியர்ன்னா பெரிய இவனா நீ? இதுக்குமேலயும் அடங்கவில்லை என்றால் உள்ளாடை இல்லாமல் சுத்தவிடுவோம் என மிரட்டி அடித்துள்ளனர். மேலும், அடி வாங்கிய மாணவனின் ஐபோனையும் அந்த கும்பல் பறித்து சென்றுள்ளது.
வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து குனியமுத்தூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரமா? கல்லூரியில் ரேகிங் விவகாரமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து ஒரு சிலர் கூறுகையில், கல்லூரி மாணவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் பொதுவெளியில் அடித்துக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் கதையின் நாயகன் மற்றொரு நாயகனின் உடைகளை அவிழ்த்து அரை நிர்வாணமாக அடித்து அனுப்பும் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது. அதே போன்று இந்த சம்பவமும் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad